சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த ஓராண்டாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதிதான் நடைபெற உள்ளது. இதனால், தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் எந்வொரு நடவடிக்கைகளிலும் இறங்க முடியாத நிலை உள்ளது. வாக்கு எண்ணிக்கை தெரிய வந்தபிறகு மீண்டும் அரசியல் நிகழ்வுகள் தீவிரமடையும். திமுக பெரும்பான்மை பெற்றால்,  திமுக ஆட்சி அமைக்கும். அவ்வாறான சூழ்நிலையில், அடுத்தடுத்து பணிச்சுமைகள் மேலோங்கும்.

இதனால், மு.க.ஸ்டாலினை சில நாட்கள் ஒய்வு எடுக்க அவரது குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தாக கூறப்படுகிறது. ஒய்வு எடுக்க வெளிநாடு செல்லலாம் என தீர்மானிக்கப்பட்ட நிலையில்,கொரோனா பரவல் அச்சம் காரணமாக, கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, இன்று  .இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கொடைக்கானலுக்கு மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் புறப்பட்டனர். அங்கிருந்தபடி ய, தேர்தலுக்கு பிந்தைய பணிகள் தொடர்பாக ஸ்டாலின் விவாதிக்க இருக்கிறாராம். அதிகபட்சம்க ஒருவார காலம் ஸ்டாலின்  கொடைக்கானலில் ஓய்வு எடுப்பார் என கூறப்படுகிறது.