சென்னை:

மிழகத்தில் கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கான தேர்வுகள் இந்த மாதம் 20ந்தேதிக்குள் முடிவடைய உள்ளது. அதையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடபப்படும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வருகிற 21-ந் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

அதேவேளையில்,பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை கிடையாது என்றும், மற்றவர்கள்  கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், மே2ந்தேதி முதல் அரசு  பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்த அமைச்சர்,  அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

அரசு பள்ளிக்கூடங்களில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கப்படும் என்றும்,.  பள்ளிக்கூடங்கள் திறந்ததும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில்  3 ஆயிரம் அரசு பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அதுபோல உயர்நிலை மற்றும்  மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட  இருக்ககிறது.  இதற்காக ரூ.463 கோடி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்..