டில்லி
ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கான வங்கிக் கட்டணத்தை ரிசர்வ் வங்கி நீக்கி உள்ளது.
ஆன்லைன் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளான ஆர்டிஜிஎஸ் மற்றும் என் ஈ எஃப் டி போன்றவகைளுக்கு வங்கிகளிடம் இருந்து தற்போது ரிசர்வ் வங்கி கட்டணம் வசூலித்து வருகிறது. இந்த கட்டணத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மறு வசூல் செய்து விடுகின்றன.
இன்று ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி இனி ஆன்லைன் மூலம் செய்யபடும் பண பரிவர்த்தனைகளான ஆர்டிஜிஎஸ் மற்றும் என் ஈ எஃப் டி போன்றவைகளுக்கு வசூலிக்கப்படும் வங்கிக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண ரத்தை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் இருக்காது என கூறப்படுகிறது ஆன்லைன் பண பரிவர்த்த்னைகளை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அத்துடன் தற்போது ஏடிஎம் களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுக்கும் போது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை குறைக்க ரிசர்வ் வங்கி ஒரு தனிக் குழு அமைத்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.