டில்லி

தார் எண்ணை வங்கிக் கணக்குடன் அவசியம் இணைத்தாக வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அரசு ஆதார் எண்ணை,  வங்கிக் கணக்குகள்,  மியூச்சுவல் ஃபண்டுகள்,   பான் கணக்கு எண், ஓய்வூதியம், சமையல் வாயு மானியம் உள்ளிட்ட பல இடங்களில் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.    இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.     உச்சநீதிமன்றம் ஆதார் எண் இணைப்பு அவசியமா என்பது குறித்து இன்னும் தீர்ப்பு சொல்லாத நிலையில் அரசு பல இடங்களில் ஆதார் எண் இணைப்பை கட்டாயம் ஆக்கி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் “நோ யுவர் கஸ்டமர்” (உங்கள் வாடிக்கையாளரை அறிந்துக் கொள்ளூங்கள்) என்னும் விதியின் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதில் “வங்கியில் பயோமெட்ரிக் ஐடிக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் வங்கி நிர்வாகம் வருமான வரி நிரந்தர கனக்கு எண் (பான்) மற்றும் ஆதார் எண் போன்றவற்றை அவசியம் கேட்டுப் பெற வேண்டும்.”  என கூறி உள்ளது.

அத்துடன் “இந்த நடைமுறை உச்சநீதிமன்றம் வழங்க உள்ள இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது”  என்னும் வாசகமும் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.