மும்பை

ங்கிகளில் கடன் பெற்றோர் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 தடவை அதிகரித்து மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டது., வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் வாங்கியவர்கள் இதனால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பாணையில்,

”மாத தவணை (இ.எம்.ஐ.) அடிப்படையில், மாறுபடும் வட்டி விகிதத்தைக் கொண்ட தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை, வட்டி உயர்த்தப்படும்போதெல்லாம், வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்காமலும், சம்மதம் பெறாமலும், இ.எம்.ஐ. தொகை உயர்த்தப்படுவதாகவும், கடன் காலஅளவு நீட்டிக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன.

எனவே, இந்த விஷயத்தில் வங்கிகள் உரியக் கொள்கை நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

வங்கிகள் கடனுக்கு ஒப்புதல் வழங்கும்போதே, வட்டி உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகை உயரும்  அல்லது கடன் கால அளவு நீட்டிக்கப்படும் என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.  மேலும் இ.எம்.ஐ. தொகையை உயர்த்துதல் அல்லது கடன் கால அளவை நீட்டித்தல் ஆகியவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை வாடிக்கையாளர்களின் முடிவுக்கே விட வேண்டும்.

வங்கிகள் கடனை முன்கூட்டியே பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ செலுத்தும் வாய்ப்பை அளிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு காலாண்டின் இறுதியில், இ.எம்.ஐ. தொகையில் அசலுக்கு எவ்வளவு, வட்டிக்கு எவ்வளவு பிடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாதங்கள் பாக்கி உள்ளன என்ற அறிக்கையை அளிக்க வேண்டும்.”

என்று உத்தரவிடப்பட்டுள்ளது.