டெல்லி:

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பொது கணக்குக் குழு (பிஏசி) முன்பு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் வரும் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அக்குழுவின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு 20-ம் தேதி விளக்கம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உர்ஜித் படேல் ஆஜராக வேண்டும். அதேநேரத்தில், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் முன்பு 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிதியமைச்சக அதிகாரிகளுக்கு பட்ஜெட் தயாரிக்கும் வேலை இருப்பதால் அவர்கள் ஆஜராவது பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.