டில்லி
இந்திய ரிசர்வ் வங்கி பே டி எம் மூலம் புதிய பணப் பரிவத்தனை செய்வதற்குத் தடை விதித்துள்ளது.

பேடிஎம் நிறுவனம் பணப்பரிவர்த்தனை செயலி சேவைகளை வழங்கி வரு பே-டிஎம் பேமெண்ட் வங்கி மூலம் வழங்கி வருகிறது. இதை மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகிறனர். இந்நிலையில் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து தொகை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையின் முடிவில் பே-டிஎம் பேமெண்ட் வங்கி சில விதிமுறைகளை நிறைவு செய்யாதது கண்டறியப்பட்டது.
எனவே அந்த வங்கியிலுள்ள கணக்குகளில் வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு தொகை செலுத்துவதற்கும், இணையவழி பணப்பைகள், பாஸ்டாக், என்சிஎம்சி அட்டைகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதற்கும் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
ஆயினும் பே-டிஎம் பேமெண்ட் வங்கிக்கணக்கில் உள்ள தொகையை வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் தொடர்ந்து எடுக்கலாம்”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]