சென்னை: ராயபுரத்தில்  பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலரை  கடித்து குதறிய நாய் அடித்து கொல்லப்பட்ட நிலையில், அந்த  ‘நாய்’க்கு ரேபிஸ் நோய்த்தொற்று இருந்தது உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நாய் கடித்த 27 பேருக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் கடந்த 21/11/2023 செவ்வாய்க்கிழமை அன்று மாலை பள்ளி மாணவர்கள் வயதானவர்கள் உட்பட 27 பேரை விரட்டி விரட்டி கடித்து வைத்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நாயை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் சேர்ந்து, தேடிச்சென்று அந்த நாயை  அடித்து கொன்றனர்.  அதன்பிறகு மாநகராட்சி நாய் பிடிக்கும் பணியாளர்கள் வந்து அந்த நாயின் உடலை கைப்பற்றி சென்றனர்.

இறந்த நாய்க்கு நடத்த  பிரேத பரிசோதனையில் ‘ரேபிஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து,  அநத நாய் கடித்த 27 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு ள்ளது.  சென்னையில், நடப்பாண்டில் இதுவரை 17,813 நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.