
கமல்ஹாசன், தனது புதிய படத்துக்கு “சபாஷ் நாயுடு” என்று பெயர் வைத்திருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத் தலைப்பை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள்கட்சியின் ரவிக்குமார் கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ரவிக்குமார் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இங்கு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சாதியின் பெயரை படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.
முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
தலைப்பிலோ வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கைவரியிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்
Patrikai.com official YouTube Channel