நடிகர் ரவி மோகன் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மட்டுமன்றி பிற மொழி நடிகர்களும் கலந்து கொண்டனர்.

கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.

தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் தயாரிக்கவுள்ள முதல் இரண்டு படங்களின் பூஜையும் நடைபெற்றது.

முதல் படத்தை கார்த்திக் யோகி இயக்க, ரவி மோகன் மற்றும் எஸ்.ஜெ. சூர்யா நடிக்க உள்ளனர்.

இரண்டாவது படத்தை ரவி மோகன் இயக்க யோகி பாபு நடிக்க உள்ளார்.