சென்னை
வரும் 29 ஆம் தேதி அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கபடி இயங்க உள்ளது.
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனரகம் ,
”ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி பணி நாளன்று, ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29-ந்தேதி, சனிக்கிழமையாக அமைகிறது.
அதனைத் தொடர்ந்து வருகிற 30-ந்தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31-ந்தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்களாகும்.
இந்த மாதத்தின் கடைசி 2 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை நாட்களாக வருவதால், குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, வருகிற 29-ந்தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டு, வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும
என அறிவித்துள்ளது.