சென்னை:
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தொல்லியல் அறிஞர் புலவர் ராசு காலமானார் .அவருக்கு வயது 85. செந்தமிழ் கல்லூரியில் வித்வான் பட்டத்தை முடித்தார். அத்துடன் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டங்களை பெற்ற இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொங்கு நாட்டு வரலாற்றில் சமண சமயம் என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஈரோட்டில் தமிழாசிரியர் பணியை தொடங்கி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் பணிபுரிந்தார் . பிறகு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கல்வெட்டு தொல்லியல் துறையில் துறை தலைமை பொறுப்பை ஏற்று திறம்பட ஆய்வு பணியை மேற்கொண்டு வந்தார். கல்வெட்டறிஞர் ,பேரூராதீன புலவர், கல்வெட்டியல், கலைச்சம்மல் , திருப்பலிச் செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.