மேஷம்

குடும்ப விவகாரங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் கட்டும் பாக்கியம் கிடைக்கும். இரண்டு மூன்று வழிகளிலும் இன்கம் வரும். எனவே செலவு பற்றிய பயம் இருக்காது. முன் எப்போதோ கொடுத்து மறந்த போயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும். வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்கள் செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். அதுல ஓரளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய இது உகந்த நேரம். நல்ல லாபம் வரும். ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எதையும் செய்துடாதீங்க. வருமானங்களும் லாபங்களும் சற்றே நிதானப்போக்கில்தான் வரும்.

ரிஷபம்

நீங்க ஸ்டூடன்ட்டா? நல்லது.. அப்பிடின்னா தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காப் படிப்பீங்க.  லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். மேடை ஏறிப் பரிசு வாங்கி.. பள்ளி.. கல்லூரியில்.. ஏன் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறவும் வாய்ப்பு இருக்குங்க. கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.  எனவே அப்பா அம்மாவுக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஏற்படும். எதிர்பார்த்த ஸ்கூலில்/ காலேஜில் இடம் கிடைக்க  அதிகக் கஷ்டப்பட மாட்டீங்க. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் முயற்சி செய்யறவங்களுக்கு நல்லபடியா சீட் கிடைக்கும். நண்பர்/ சிநேகிதி ஒருவருடன்… அல்லது காதலன்/ காதலியுடன் ஏற்பட்டிந்த சண்டை ஒன்று  சமாதானமாகி.. சரியாகி இப்போ ஹாப்பியாப் பேச ஆரம்பிப்பீங்க. நீங்களே விட்டுக்குடுத்துப் போயிடுவீங்க. நிறைய செலவுங்க வந்தாலும் அத்தனையும் சந்தோஷமான சுப செலவுகள்தான்.

மிதுனம்

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் டாட்டா சொல்லிட்டுக் காணாமல் போயிடுங்க. ஃபாரின் வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. அனேகமாக் கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்குங்க. கவலை வேணாம். சக்ஸஸ்தான். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும், அவங்களுக்குப் பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது.  அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும்.  நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு டிஸைட் பண்ணி சீக்கிரம் ஸ்டார்ட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்சினைக்குள் போய்ச் சிக்கிக் கொள்ள மாட்டீங்க.  நல்ல வேலைவாய்ப்பபு கிடைக்கும். வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும்..

கடகம்

மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை பார்க்கறவங்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் தடை தாமதத்துக்குப் பிறகு சம்பள உயர்வு கிடைக்கும். கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும். கலைத் துறையினரின் திறமைகள் வெளிப்படும். முயற்சியோடு பிசினஸ் செய்யறவங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. கவலையைவிடுங்கப்பா.  நல்லதே நடக்கும். அலுவலகத்தில் உங்களை அடிச்சுக் கேட்டால்கூட யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லாதீங்கம்மா. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினால் என்னங்க?

சிம்மம்

உங்களுக்குள்ளே சின்னதாய் ஒரு பயம் இருக்கவே செய்யும். ஆனாலும்… இருந்தாலும் தைரியம் மாதிரி காண்பிச்சுக்கிட்டு, எதையும் செய்து வெற்றிகரமா முடிச்சுடுவீங்க. மாணவர்களுக்கு  அருமையான வாரம் இது. நல்லாப் படிச்சுத் தேர்வுகளை எழுதுவீர்கள். வண்டி வாகனத்தில் போகும் போது கேர்ஃபுல்லாப் போங்க. ப்ளீஸ் நல்லதே நடக்கும். டவுட் வேணாம். இந்த வாரம் கூடுமானவரை பெரிய அளவிலான மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. புதிய தொழில் செய்வதானால் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் அதிகமாகும். அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாக்கும். பேச்சில் கவனமாக இருங்க. யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். யாரிடமும் ‘போட்டுக்கொடுக்க’ வேண்டாம்.

கன்னி

ரொம்பவே மன நிறைவோடு இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பார்க்கப்போறாரு/ போறாங்க.  இதனால குடும்பமே குதூகலத்தில் மிதக்கும். இந்த வாரத்துல அதிர்ஷ்டம் அதிகமாகும். உறவினர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர் களுடன் இன்பச்சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. திருமண வாய்ப்பு உறுதியாகும். மனசுக்கு நெருக்கமானவருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் மிக்கவர்கள் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துகொள்வீங்க. பட்.. மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள், உங்களோட சொந்த முயற்சியாலேயே விடுபடும். பிலீவ் மீ. பழைய பிராப்ளம்ஸ் தீர்ந்து நிம்மதி ஏற்படும். உங்க நண்பர்/ சிநேகிதியின் தூண்டுதலால், தீய எண்ணங்களோ, குறுக்கு வழியில் லாபம் சம்பாதிக்கும் நினைப்போ யாரையும் கெடுக்கும் எண்ணமோ வராமல் பார்த்துக்குங்க.

துலாம்

உங்களுக்கு எந்த வயசானாலும், புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். சிரத்தையுடன்… அக்கறையோட.. கத்துக்குவீங்க. அடிக்கடி டிராவல் செய்ய வேண்டி வரும். அந்தப் பயணங்களால் நீங்கள் ரொம்ப நாளாய் எதிர்பார்த்திருந்த நற்பலன்கள் ஏற்படும். எனவே பயணங்களால் டயர்ட் ஆக மாட்டீங்க.மாறாக உற்சாகம்தான் ஏற்படும். இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். புதிய  வீடு பொலிவுடன் ரெடியாகும். நண்பர்களையும் உறவினர்களையும் அழைச்சு விருந்து தருவீங்க. குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே ரொம்ப நாளாய் அப்படித்தான் இருந்துக்கிட்டிருக்கு என்கிறீர்களா. இதோ சரியாகிவிடும். பல காலப் பிரச்னைகள் மெல்லத் தீர ஆரம்பிக்கும்.

விருச்சிகம்

உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். அப்படிக் குழப்பம்.. பிரச்னை.. சண்டை ஏதும் ஏற்படாமலேயே காக்க நீங்க முயற்சி செய்யலாம். பலன் இருக்கும். கண், பல், சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுப்பீங்க. அதனால சரியாகிவிடும். டென்ஷனை குறைங்கப்பா. எதுக்காகத்தேவையே இல்லாமல் குரலை உயர்த்தறீங்க. ப்ளீஸ் இந்த வாரம் யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க. அதுகூடப் பரவாயில்லை.. உங்க பெருமையைப் பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. மத்தவங்களையும் கொஞ்சம் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எஸ்பெஷலி ஆண்கள்.. எப்பவும் புலம்பாதீங்க. பெண்களே.. உங்க பக்கம் நியாயம் இருக்கும் என்றால் நீங்க எதுக்கும்.. யாருக்கும் பயப்படாதீங்க. குழந்தைங்க கொஞ்சம் டென்ஷன் செய்வாங்கதான். உடனுக்குடன் சரியாயிடும்.

தனுசு

உங்க பேச்சில கவனமாக இருக்கணும். யாரையும் ஹர்ட் செய்யும் வகையில் பேசிடாதீங்க. எதிர்பாலினத்தவர் உங்ககிட்ட நடந்து கொள்ளும் முறைக்கு நீங்க ரியாக்ட் செய்யும் விதம், நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கப்பா.  ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்து விடுங்கள். மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். ஒரு நிமிடத்தில் கெட்ட பழக்கம் உள்ளே புகுந்துவிடும். பிறகு துரத்துவது இம்பாஸிபிள். உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. பயணங்களில் வெற்றி கிடைக்கும். எஸ்பெஷலி அலுவலக சம்பந்தமான டூர்களில். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும்.

மகரம்

இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா?  இனி மனசுக்குப் பிடித்த வகையில் திருமணம் அமையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. குறைஞ்சு போயிட மாட்டீங்க. பெண்களுக்கு நல்லதே நடக்கும். பிசினஸ் செய்யறவங்களா நீங்க.. எனில் உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. அது போதும். இந்தப் பிரச்சினை பர்மனென்ட் இல்லைன்னும் புரியும்.  மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க.  சற்றே முயற்சி எடுத்தால் போதும். சூப்பரா எக்ஸாம் எழுதுவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதிக்காக சுற்றுலா போவீங்க. போன இடத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும்.  அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும். வெளியூரிலிருந்து உறவினர் வந்து வீட்டைக் கலகலப்பாக்குவார்கள்.

சந்திராஷ்டமம் : மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.

கும்பம்

விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் தொடரும். இதுவரை தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்த்தீங்க. அதனால் உழைப்புகேற்ற பலன் இல்லாமல்  இருந்தது. எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்தது. அதெல்லாம் இனி மாறியாச்சுங்க. இவ்ளோ காலமாய்க் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டம் இருக்கும். பொறுமை. பொறுமை. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். புது மனிதர்கள் கிட்ட கொஞ்சம் கவனமா இருந்துட்டால் போதும். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குக் குடுக்காதீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.

மீனம்

வீட்டுல இதுவரைக்கும் தள்ளிப் போயிக்கிட்டிருந்த சுபகாரியங்கள் நல்லமுறையில் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாய் உங்க  சகோதர சகோதரிங்களுக்கு நடக்காமல் தள்ளிப் போய்க்கிட்டிருந்த திருமணம் அல்லது குழந்தைப் பேறு உறுதியாகும்.  இதுவரை உங்ககிட்ட இருந்துக்கிட்டிருந்த மந்த நிலை அல்லது சோம்பல் நிலை காணாமல் போயிடும். சுறுசுறுப்பும்  வேகமும் உடம்புக்குள் புகுந்து கொள்ளும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு வந்து.. நல்ல வேளையாய் வெள்ளைக் கொடி பறக்க விட்டு சமாதானம் ஆயிடுவீங்க. தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசி உங்க பார்ட்னரை ஹர்ட் செய்யாதீங்க . ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. அநாவசியமா மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்கவே செய்யாதீங்க. உங்க ரகசியங்களை  எந்த நண்பரிடமும்/ சிநேகிதியிடமும் சொல்ல வேண்டாம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 26 முதல் மார்ச் 29 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம்.