வாராந்திர ராசி பலன்: 21.1.2022 முதல் 27.1.2022 வரை!  வேதாகோபாலன்

Must read

மேஷம்

இது வெற்றிகரமான வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். லேடீஸ்புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவாங்க. கடன் பிரச்சினைகள் தீரும். சேமிப்பு உயரும். வாகனம் வாங்குவீங்க. அது நன்மையையும் லாபத்தையும் அளிக்கும். மம்மிக்கு எல்லாமே சற்று தாமதமா நடக்கலாம். லேட்டா வந்தாலும்.. லேட்டஸ்ட்டா வருவீங்க. விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி உண்டு. ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். பயணத்துக்கு ரெடியாயிருக்கீங்களா? டோன்ட் ஒர்ரி. அந்தப் பயணம் எவ்ளோ நன்மைகளை உங்களுக்குத் தரப்போகுது தெரியுமா? பணியில் இருப்போருக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிடிவாதப் போக்கைக் கொஞ்சம் மாத்திக்க வேண்டி வரும். ஸோ வாட்? மாத்திக்குங்க!

சந்திராஷ்டமம் : ஜனவரி 26 முதல் ஜனவரி 28 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

அதிகம் உழைக்க வேண்டி வரும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற உணர்வு  ஏற்படும்.  உண்மையில் அப்படியெல்லாம் இல்லீங்க. சரியாத்தான் இருக்கு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீங்க. காணாமல் போன முக்கிய டாக்குமென்ட்ஸ் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீங்க. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீங்க. திடீர் வருமானம் வரும். இந்த வாரம் நீங்க எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைங்களால குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனித்துவமாக தன்னை தெரிய வேண்டுமென்பதற்காக உள்ளத்தில் நினைத்ததை அப்படியே வெளிப்பாடு செய்வதால் சிலரின் எதிர்ப்புகளுக்கு ஆளாவர்.

மிதுனம்

மனதிற்கேற்ற வரன்கள் அமையப் பெற்று திருமண காரியங்களை திருப்திகரமாக முடித்து விட நீங்க எடுத்த முயற்சிகளை, மீண்டும் எடுக்க நேரிடும். எனவே வரன் வீட்டார்களுடன் ‘வரம்பு’ மீறி எதையாவது பேசி வைக்காமல் இருக்க வேண்டும். எந்த செயல்பாடுகளிலும் அவசரம் காட்டாமல் மென்மையான போக்கில் செயல்பட்டால் மேன்மை நிச்சயம் உண்டு. டாடி-யின் நலனில் கூடுதல் கவனம் தேவை, கண் மற்றும் கை கால்களில் வலி ஏதேனும் ஏற்பட்டாலும், எப்படிப்பட்ட பிரச்னையானாலும் வழி மாறி வந்து விட்டது போல் உடனே சென்று விடும் எதற்கும் அஞ்சேல். சிஸ்டர்ஸால் நன்மை உண்டு. உங்களோட கணவருக்கு எதிர்பாராத அமவுன்ட் ஒன்று கிடைக்கும். அல்லது அவருக்கு அலுவலகத்தில் அரியர்ஸ் கிடைக்கக்கூடும். ஏன்… பதவி அல்லது சம்பளம் உயரவும் வாய்ப்பு உள்ளது. அதிருஷ்டமும் அரசாங்க நன்மையும் ஒருங்கே கிடைக்கும்..

கடகம்

டாடிக்கு அனைத்து வகை நன்மைகளும் கிடைக்கும். அவரால் உங்களுக்கும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஹாப்பீ செய்திகளெல்லாம் நிறைய உண்டுங்க… உங்களுடைய நியாயத்தை மற்றவங்க புரிஞ்சுக்கலைன்னு புலம்பறீங்களே…புரிய வெச்சீங்களா? இல்லாக்காட்டி அவங்களோட நியாயத்தையாவது நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? அட அட்லீஸ்ட் அதுக்கு முயற்சியாச்சும் செய்தீங்களா?  ஆபீஸ் சீனியர்ஸ்க்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீங்க. உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் பணியாளர்கள்: தங்களது திறமைக்கு ஏற்ற வருமானம் வரவில்லையே என புலம்பலாம், இருப்பினும் உங்களோட நீதியும், நேர்மையும் நேரம் வரும் போது கவனிக்கப்படும். உயர் அதிகாரிங்க மூலம், சக ஊழியர்கள் மூலம் ஜாமீன் போன்ற வகையில் சட்ட சிக்கல்களை சந்திக்கலாம்.

சிம்மம்

திடீர்னு முகவரி மாறவும் வாய்ப்புள்ளதுங்க. அது வீடாகவும் இருக்கலாம், ஆபீசாகவும் இருக்கலாம். எதுவும் நன்மைக்குத்தான். குடும்ப நிகழ்வுகளில் சற்று மெதுவான போக்கு இருக்கலாம். அதைக்  கண்டு பயம் எதுவும் வேணாங்க. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.அலுவலக /சொந்த விஷயமாகவும் வெளியூர் வெளிநாடு என்று போக வாய்ப்பு உள்ளது. பெட்டி, படுக்கை, ஃப்ளாஸ்க் எல்லாவறையும் ரெடியா வெச்சுக்குங்க. கவர்ச்சிகரமாகப் பேசி நன்மை அடைவீங்க. மறுபுறம் பேச்சினால் இதனால் தேவையற்ற பயமோ கவலையோ டென்ஷனோ ஏற்படலாம். அதற்கு அனுமதிக்க வேண்டாம். அநாவசிய கோபம்  ஏற்படாமலும் நீங்க மற்றவர்களைப் பார்த்து சத்தம்  போடாமலும் பார்த்துக்குங்க.. உங்க பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீங்க.பிள்ளைங்களாலமதிப்பு கூடும். விலகி நின்றவங்க விரும்பி வருவாங்க.

கன்னி

உங்களுக்கு இயல்பிலேயே இருந்துக்கிட்டிருந்த பிடிவாதப் போக்கை கொஞ்சம் தளர்த்திக்குவீங்க.பிள்ளைங்களாலமதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவாங்க. மேலதிகாரிங்க கிட்ட தேவையற்ற பேச்சுக்களை அறவே நிறுத்துங்கள். இக்காலக் கட்டங்களில் எடுக்கும் அதிகமான முயற்சிகள் எதிர் காலத்தில் வெகுவான உயர்வுக்கு காரணமாக அமைந்திடும். வெளிநாட்டு வாய்ப்புகள் மிக விரைவில் வரலாம். அரசாங்க பாராட்டுகளுக்கு எதிர்பார்த்து மாறிப் போகலாம். இருக்கும் பணத்தை வெச்சுக்கிட்டுக் கட்டிக்காப்பாத்தி, அனாவசிய செலவுகளை குறைத்து கொள்வது நலம். புதுப் புது நண்பர்கள் மூலம் புகழும், பணமும் வரும் என்று நம்புவதற்கான கால நேரம் இது இல்லை கவனம். குடும்பத்தாருடன் ஆன்மீக பயணம் செல்வீங்க. சிஸ்டர்ஸ் மற்றும் பிரதர்ஸ் அனுசரணையா இருப்பாங்க. நீங்க மாணவரா? எனில் படிப்பில் முழுக் கவனம் செலுத்துங்க. பிரைஸ் வாங்குமளவுக்கு சக்ஸஸ் வரும்.

துலாம்

உங்களுக்கு ஓர் அருமையான உத்யோகம் கிடைக்க  வாய்ப்புள்ளது! வெளிநாட்டு உத்யோகத்தில் உங்களை உட்கார வைக்கப்போகிறது. காரணம்..வேறென்ன? தற்போதைய கிரக நிலைமைதாங்க. அட.. அப்படிக் கிடைக்கலைன்னா கூட, உள்ளூரில்  இருக்கும் வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசாங்க நன்மைகளுக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்ச காலம் காத்திருக்கணும். ப்ளீஸ். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வாங்க. வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வாங்க. வியாபாரம் சூடு பிடிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மேன்மையான குணம் கொண்ட நீங்க நிதானமாக வார்த்தைகளை அளந்து பேச வேண்டிய நேரம், தாயார் வழி சொத்துக்கள் வந்து மகிழ்ச்சி தரும், உடன்பிறந்த பெண்களுக்கு நல் வழிகாட்டப்படும்.

விருச்சிகம்

திடீர் அதிருஷ்ட வாய்ப்புக்கள் உங்களைத் தேடி ஓடி வரும். குழந்தைங்க திடீர்ப் புகழ் அடைவாங்க. முன்பிருந்த அளவு வேலை பளு தோளை அழுத்தாது… அதற்காக ஒரேயடியாய்ப் பின்னால் சாய்ஞ்சுக்க முடியும்னு கனவு காணாதீங்கப்பா. உங்கஜாதகப்படி நல்ல வேளை நடந்து கொண்டிருந்தால் அலுவலகத்தில் திடீர்னு உங்களைக்கூப்பிட்டு உயரத்தில் உட்கார வைப்பதற்கும் வாய்ப்புள்ளது. குழந்தைங்க  வாழ்வில் திடீர்  சம்பவம் ஒன்று நிகழ்ந்து உங்களுக்கு சந்தோஷம் தரும். அது  நல்ல நிகழ்ச்சியாகவே இருக்கும். எனவே நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருங்க. குழந்தைங்க வெற்றி பெற்று உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வாங்க. சகோதர சகோதரிகளுக்கு சிரமங்கள் வரக்கூடும். நீங்க உதவி செய்வதால் மீளுவாங்க. குழந்தைங்க உங்க மனதைக் குளிர்விப்பாங்க.. நல்ல வேளையாய், அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும்.

தனுசு

நீண்ட நாள் கை பிடிக்க கனவுக்கண்ட காதலர்களுக்கு தங்கள் எண்ணங்கள் ஈடேறும் காலம் வந்து விட்டது எனலாம். தாய்வழி உறவுகள் மிகவும் அன்யோன்ய மாக வந்து நட்பு காட்டுவர், புதிய வாகனம், ஜவுளி, நகை போன்றவைகளை வாங்கி மகிழ்ச்சி அடையப்போறீங்க. ஜாலிதான். சின்னச் சின்னதாய் எறும்புக்கடி மாதிரி ஆரோக்யம் கடிக்கும். கண்டுக்காதீங்க. அது பாட்டுக்கு அதுன்னு எடுத்து பின் சீட்ல போட்டுவிட்டு அலட்சியமா முன் நோக்கி ஓட்டுங்க அண்ட் ஓடுங்க. திடீர் அதிருஷ்டமும் திடீர் லாபமும் இருக்கும். அழகிய வீடு வாங்க வாய்ப்புகள் அதிகம்.  அல்லது உங்க தாயார் வீடு வாங்கவும் வாய்ப்புள்ளது.  விழாக்கள், கொண்டாட்டங்கள் என்று குடும்பம் குதூகலிப்பதுடன் புதுப்புது சாதனைகளும், ஒப்பந்தங்களும் உங்களை மிகவும் நிம்மதியும் சந்தோஷமும் கொள்ள வைக்கும். உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து கற்பனை பயத்தைக்குடுக்காம பார்த்துக்குங்கப்பா.

மகரம்

சொந்த பந்தங்களுக்குள் நல்ல நட்புறவு பெருகும். இதனால் குழந்தைகளுக்கு வரன் தேடும் வேலை எளிதாகலாம். தாயார் நினைத்தது போலவே தன் சொந்தத்திற்குள் வரன் பார்த்து வாழ்க்கை பாதை அமைத்துக் கொள்ள உதவிடுவர். குறிப்பாக தந்தையார் வழி உறவுகளை எவ்வளவு சமாதானத்துடன் நடந்து கொண்டாலும் அவர்கள் சொன்னதை திரும்ப, திரும்ப சொல்லி வெறுப்பேற்றலாம். பொறுமையுடன் செயல்படுவதே சிறப்பாக அமைந்திடும். வேலைகளில் வெகு மும்முரம் காட்டுவீங்க. மேலதிகாரிகளும் மிகவும் இணக்கமாக நடந்து கொள்வர். கேட்ட இடமாறுதல், பதவி உயர்வு, எதிர்பார்த்த வீட்டு கடன், வாகன கடன்கள் யதார்த்தமாக, உடனடியாக வழங்கப்படலாம் அதிகமான பாச மழையை பெருங்காற்று போல் பொழிவாங்க. ஏனெனில் உங்க தயவு உடனடியாக அவங்களுக்குத் தேவைப்படும் படியான காலக்கட்டம் இது. குடும்ப நிர்வாகத்தை குறைவின்றி நடத்திக் காட்டும் உங்க திறமை நிச்சயம் போற்றப்படும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 20 முதல் ஜனவரி 22 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கும்பம்

நீங்க கலை சம்பந்தமான புதிய வகுப்புகளில் சேர வாய்ப்புள்ளது. புது வாகனங்கள் அமையும். அவை காண்போரைக் கவரும் அழகிய வாகனமாக இருக்கும்.உத்யோகத்தில் பொறுப்பும் அக்கறையும் கவனமும் தேவை. இயந்திரங்களை இயக்கும் போது மனசை உலாப்போக விடாதீங்க. உங்க மம்மி உங்களுக்கு நன்மைகளை அள்ளி வழங்குவார். தங்க நகைங்க  கூடப் பரிசளிக்கலாம்! கல்வியில் அசத்துவீங்க. புது வண்டி வாங்குவீங்க. அல்லது தற்போதுள்ள வாகனத்துக்குப் புதுப் பொலிவு கிடைக்கும். சில காலம் முன்பிருந்த பண ஓட்டம் இப்போது இல்லை என்னும்படியாக ஒரு பிரமை ஏற்படும். பிளீஸ் வெயிட். நிறைவான வாழ்க்கை அதிக தொலைவில் இல்லைங்க. அப்போ கேட்டதெல்லாம் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப் பீங்க. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 22 முதல் ஜனவரி 24 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

குழந்தைங்க பற்றிய சிறு  டென்ஷன்கள் ஏற்பட்டாலும்  அவை எல்லாமே தற்காலிகமானவைதான்.  குழந்தைங்க வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  கணவருக்கு/ மனைவிக்கு நன்மை உண்டு.  கல்வியில் மிகவும் சிறந்த விளங்கப் போறீங்க. உங்க உடன் பிறந்தவங்களுக்கும் உங்களால் உதவிகள் உண்டுங்க. பணிபுரியும் லேடீஸ்பக்குவமாக சக ஊழியர்களிடமும், அதிகாரிங்களிடமும் நடப்பது நல்லது. வாய்ப்பேச்சில் வம்புகள் இலவசமாக வந்து வறுத்தெடுக்கும் உஷார், புதிதாக நகை வாங்கு வீங்க. திருமண வயதில் உள்ளவர்கள் மனதிற்கேற்ற வரன் கிடைக்கப் பெறுவர். குழந்தைப் பேறு இல்லாத சிலருக்கு மழலைகள் கிடைக்கலாம். ‘ஆண்’ வர்க்கத்திடம் மதிப்பும், மரியாதைகளுடன் நடந்து நற்பெயர் பெறுதல் அவசியம். உச்சாகமூட்டும் தகவல் வரும். உடல் நலம்: பரபரப்பாக இயங்கும் நிலையில் செயல்பட தயாராகி விட்டது. தங்களின் உறுதியான மனமும், உடலும், பெண், குழந்தைங்க நலமும் நன்றாகவே இருக்கும். ஆன்மிக பயணங்கள் மூலம் ஹாப்பியா ஆயிடுவீங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 24 முதல் ஜனவரி 26 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

More articles

Latest article