ளவட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தன்னா. விஜய்தேவர கொண்டா வுடன் டியர் காம்ரேட், கீதாகோவிந்தம் படங் களில் அழகான நடிப்பை வெளியிட்டு வெகு சீக்கிரமே தெலுங்கில் முன்னணி நடிகர்கள் மகேஷ்பாபு. அல்லு அர்ஜுனுடன் நடிக்க வாய்ப்பை பெற்றிருக்கிறார். தமிழிலும் கார்த்தி ஜோடியாக ’சுல்தான்’ படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.


முன்னதாக கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி யுடன் ’கிரிக் பார்ட்டி’ படத்தில் ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா. சினிமாவில் ஜோடி சேர்ந்த இவர்களுக்குள் நிஜக் காதலும் மலர்ந்தது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் திருமணத்துக்கு மறுத்து ரக்‌ஷித் ஷெட்டியின் காதலை உதறினார் ராஷ்மிகா. இருவரும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். தெலுங்கில் நடித்து ராஷ்மிகா பிரபலம் ஆனதுபோல் ’அவனே ஸ்ரீமன்நாராயாணா’ என்ற படத்தில் நடித்து பரபரப்பான ஹீரோ ஆனார் ரக்‌ஷித் ஷெட்டி
ரக்‌ஷித், ராஷ்மிகா இருவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நிலையில் இரு வரும் ஜோடி சேர்ந்து நடித்த ’கிரிக்பார்ட்டி’
படத்தின் 2ம் பாகம் தயாரிக்க அப்பட தயாரிப் பாளர் முன்வந்திருக்கிறார். இதில் ரக்‌ஷித் உடன் ராஷ்மிகா சேர்ந்து நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தொழில் ரீதியாக தனது சம்பளத்தை தந்தால் ராஷ்மிகா நடிப்பார் என்றே அவரது தரப்புசொல்கிறது.