சூரரைப் போற்று திரைப்படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் 39-வது படத்தை இயக்குநர் சிவா இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக இயக்குநர் ஹரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டுடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குநர் ஹரி இயக்குகிறார். ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சூர்யா, இயக்குநர் ஹரி இணையும் 6-வது படம்.

இசையமைப்பாளர் டி.இமான் சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள ரஷ்மிகா மந்தனா தான் அருவா பட ஹீரோயின் என்று தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]