சென்னை:

மிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் வருகிற 24ந் தேதிக்குள், புதுப்பித்துக் கொள்ளலாம் என்று  தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்து உள்ளது.

மேலும் இணையதளம் மூலமும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

‘இதுகுறித்து வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் வேலை வேண்டி அரசின் வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்துள்ளவர்கள், கடந்த 2011முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது.

அதன்படி புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் ஜன. 24ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் www.tnvelaivaaippu.gov.in/empower என்ற இணையதள முகவரி வாயிலாகவும் புதுப்பிக்கலாம்.

இவ்வாறு  வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் ஜோதிநிர்மலா குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]