‘மனிதம்’ என்ற பெயரில் சமீபத்தில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இலங்கையின் முதல் பெண் ராப் இசை பாடகி ரத்யா. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான ரத்யா சட்டம் பயின்றுள்ளார்.
இவரது ஆல்பம் வெளியான சிலநாட்களிலேயே பல்லாயிரம் ரசிகர்கள் பார்த்திருப்பதோடு, லைக்குகளையும் அள்ளி வருகிறது.
ஜீவன்களில் தேடல்களும் அனுதினம் ஏன்
விரும்பிடும் வாழ்க்கை இங்கே வலிப்பதும் ஏன்
உறவினில் இச்சை கொண்டு அன்பு பிச்சை ஏன்
இன்பங்களில் முடிவினில் இடர்களும் ஏன்
என்ற அற்புதமான கவிதை வரிகளோடு அமைந்த அந்த பாடலுக்கு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி உள்ளிட்ட பலரும் லைக் போட்டுள்ளனர்.
சென்னையில் சில ஆண்டுகள் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட ரத்யாவுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் இலங்கையின் ஆதவன் வானொலியில் தற்போது செய்தி வாசிப்பாளராக உள்ளார்.
இவரது ஆல்பங்களையும் பாடலைகளையும் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதி வெகுவாக பாராட்டி இருப்பதாகவும், விரைவில் அவரது இசையில் தனது குரல் ஒலிக்கயிருக்கிறது என்றும் இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் ரத்யா.