murthal 2502-murthal-3win-580x395ஹரியானா மாநிலத்தில் பெருமளவு உள்ள உயர்சாதி எனப்படும் ஜாட் சமூகத்தினர், இடஒதுக்கீடு கோரி கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.   போராட்டம் என்கிறப் போர்வையில்  வன்முறை, ரயில் மறியல்,  வன்புணர்வு போன்ற சட்ட விரோத செயல்களிலும்  ஈடுபட்டு வந்தனர். அரசு இவர்களை திருப்தி படுத்தும் விதமாக அனைத்து பொதுப்பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு அறிவித்ததை அடுத்து போராட்டக்காரர்கள்  சற்று தணிந்தனர்.
 
 
 

murthal violanceஆனால் அவர்கள் ஏற்படுத்திய சேதம் குறித்த சட்ட நடவடிக்கைகள் முழுமை அடையவில்லை.

பிப்ரவரியில் நடந்த ஜாட் ஒதுக்கீடு பரபரப்பின் போது கூறப்பட்ட வன்முறை, தீ வைப்பு மற்றும் கற்பழிப்பு வழக்குகள் இன்னமும் ஹரியானா அரசாங்கத்தை விடாமல் பின்தொடர்கிறது, அரசு இன்னும் பிரகாஷ் குழு அறிக்கையை பொது மக்களுக்கு வெளியிடவில்லை.
அரியானா அரசாங்கத்தின் மறுப்பு அறிக்கையின் உள்ளடக்கங்களை மாநில அரசு பகிரங்கப்படுத்த மறுத்துவிட்ட போதும் கூட, இந்த அறிக்கையிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் மேற்கோள் காட்டப்பட்டது மாநில அரசைக் கோபப்படுத்தியுள்ளது.

murthalஇந்தப் போராட்டத்தின்போது மூண்ட வன்முறை, முர்தலில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது ஆகியவை குறித்து விசாரணை நடத்த பிரகாஷ் சிங் தலைமையில் ஹரியாணா அரசு குழு ஒன்றை அமைத்தது.
குற்றவாளி போலீசார் மற்றும் அதிகாரிகள் குறித்த
தகவல்களை அடுத்து, திங்களன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் அரசாங்கம் அறிக்கையை ஒப்படைத்த பிறகு, அதற்கு மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது.
 
murthal-rape-2-768x400
பிப்ரவரி 22 அன்று முர்தாலில் எந்தக் கற்பழிப்புகளும் நடக்கவில்லை என்று மாநில அரசு கூறிக்கொண்டாலும், அமிக்கஸ் க்யூரியே அனுபம் குப்தா பிரகாஷ் குழு அறிக்கையை மேற்கோள் காட்டி, அறிக்கையில் முர்தால் கூட்டுக் கற்பழிப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதனால் மாநில அரசு வேண்டுமென்றே உண்மைகளை மறைக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

murthal 463945-jat-protests11
“அறிக்கையில், ஒரு சாலையோர தாபாவில் நிர்வாணமான பெண்கள் அடைக்கலம் புகுந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் தாபாவின் பெயர் மற்றும் அதன் உரிமையாளர் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், குழுவின் மூன்று உறுப்பினர்கள் தாபா உரிமையாளர் கூறியதை பதிவு செய்துள்ளனர். அந்தத் தாபா உரிமையாளர், நிர்வாண பெண்கள் அவரது கடைக்கு வந்ததாகவும் அவர் அவர்களுக்கு போர்வைகள் மற்றும் ஆடைகள் கொடுத்துப் பின்னர் வீட்டிற்கு அனுப்பினார் என்றும் கூறினார், “என்று குப்தா கூறினார். இதற்கிடையில், அரியானா மாநில அரசு இந்த விவகாரம்குறித்து அறிக்கை சமர்ப்பித்தது.

murthal 2
சிறப்பு புலனாய்வுக் தலைமை அதிகாரி மம்தா சிங், போலீஸ் ஆறு மணி நேரம் தாபா உரிமையாளரை விசாரணை செய்ததாகவும், அப்போது அவர் மன வலுவிழந்து கற்பழிப்புகள் நடந்ததை மறுத்தார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணையில்  குப்தா மற்றும் ஹரியானா அரசாங்கத்தின் ஆலோசகர் லோகேஷ் சிங்கல் இடையே சூடான விவாதங்கள் நடந்தது, இறுதியில் குப்தா அவர்கள் அரியானா DGP நீதிமன்றத்தில் தோன்ற வேண்டும் அல்லது தாபா உரிமையாளர் ஒரு ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
murthal jat protest