சேலம்:
சேலம் மாவட்டம் அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாள். இந்த கொடூரத்தைச் செய்த 16 வயது சிறுவன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தெளுங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் ஆறு வயது மகள் தர்ஷினி. சிறுமியை திடீரென காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் வீட்டில், பூஜை அறையில், பாத்திரம் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.
இதுதொடர்பாக ராமனும், அவரது 16 வயது பேரன் திருமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்., சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.
பாலியல் குற்றச்சாட்டின் பேரில், 5 மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களால் முதியவர் ராமன் விரட்டி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.