சென்னை,
மிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே தமிழக தலைமை செயலாளர் வீடு மற்றும், அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உறவினர்கள் வசிக்கும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
தலைமை செயலாளர் அறை உள்ள தலைமை செயலகத்திலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இது தலைமை செயலக ஊழியர்களிடையே அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் இந்தி அதிரடி நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஸ்டாலின் : தமிழக தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு என்று கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர் : ஸ்டாலின் கூறியதை போன்று இது தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய தலைகுனிவு.
நிர்மலா சீதாராமன் – மத்திய அமைச்சர்: வருமான வரித்துறையினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படை யிலேயே சோதனை நடைபெற்று வருகிறது.  இதில் உள்அர்த்தம் ஏதும் இல்லை என்றார்.
பொன்.ராதாகிருஷ்ணன் – மத்திய அமைச்சர்:  தமிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் நடைபெற்று வரும்  வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. அதிகாரிகள் தங்கள் வேலையை செய்து வருகின்றனர் என்றார்.
பாமக ராமதாஸ் : வருமானவரி சோதனையும், நடவடிக்கையும் தலைமை செயலாளருடன் நின்றுவிடக் கூடாது. ஆட்சியாளர்களிடமும் நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும்  ஊழல்வாதி ராம்மோகன்ராவே, தமிழகத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக இருந்தது தான் கொடுமை என்றும் கூறி உள்ளார்.