சென்னை.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்க தினசரி 18 குளுகுளு பேருந்துகளை இயக்க திருப்பதி தேவஸ்தானமும், ஆந்திர போக்குவரத்து துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
பிரபலமான திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி சென்று வருகிறார்கள். அவர்கள் பேருந்துகளையே அதிகமாக நாடுகிறார்கள்.
இதையடுத்து, திருப்பதிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக,  ஆந்திரா போக்குவரத்து கழகமும், திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து, பக்தர்கள் வசதிக்காக, தரிசனத்துக்கு பஸ் நிலையத்திலேயே பதிவு செய்யும் வசதியை ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

தற்போது,  கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு செல்ல 18 புதிய ஏ.சி. பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது.
சாதாரண ஏ.சி. பஸ்சுக்கு 282 ரூபாய் கட்டணமும்,, மல்டிடெக் ஏ.சி. பஸ்சுக்கு  319 ரூபாயும், வால்வோ பஸ்சுக்கு ரூ.364 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பேருந்து கட்டணத்துடன் ரூ.300 கூடுதலாக செலுத்தினால் விரைவாக சாமி  தரிசனம் செய்ய முடியும்.
இந்த வசதி இன்னும் ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என தெரிகிறது. அடுத்தடுத்து முக்கியமான விழாக்கள் வருவதால் ஏ.சி. பஸ்கள் இயக்கப்படுவது பக்தர்களுக்கு வசதியாக இருக்கும் என நம்பப்படுகிறது.