1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை பற்றி உருவாகும் படம் ‘83’ . இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார்.

கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன்நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படம் இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை கபீர்கான், தீபிகா படுகோன், விஷ்ணு இந்தூரி, சஜீத் நாதியத்வாலா, ஃபேண்டம் பிலிம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழில் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளது.

இப்படத்தில் கபில் தேவ் மற்றும் அவரது மனைவி ரோமி தேவ் தோற்றத்தில் ரன்வீர் மற்றும் தீபிகா இருக்கும் புகைப்படத்தை ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இப்புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.ஜூன் 4ஆம் தேதி இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.