ரஞ்சி கிரிக்கெட்: குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை!

Must read

 
ஜெய்ப்பூர்:
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோஹெல் புதிய உலக சாதனை நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாநிலங்களுக்கு இடையிலான ரஞ்சி போட்டியின்  காலிறுதிப் போட்டிகள்  தற்போது அரையிறுதியை எட்டியுள்ளன.
இந்நிலையில் ஒடிசாவுக்கு எதிரான ரஞ்சி காலிறுதிப் போட்டியில், குஜராத் அணியின் தொடக்க வீரர் சமித் கோஹெல் (வயது 26) ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த தொடக்க வீரர் என்ற சாதனையை  சமித் பெற்றுள்ளார்.
ஆட்ட முடிவில் குஜராத் அணி 706 ரன்கள் எடுத்து ஒரிசாவுக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. மேலும், அதிக ரன்கள் குவித்ததன் மூலம் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பும் குஜராத் அணிக்கு பிரகாசமாக உள்ளது.

More articles

Latest article