உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ள ரஞ்சன் கோகோய் இன்று தனது கன்னி பேச்சை அவையில் பதிவு செய்தார்.
டெல்லி அவசர சட்டம் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ரஞ்சன் கோகோய் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து பேசினார்.
ரஞ்சன் கோகோய் தனது உரையை துவங்குவதற்கு முன்பு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஜெயா பச்சன், பிரியங்கா சதுர்வேதி, சிவசேனா (UBT); வந்தனா சவான், என்சிபி; மற்றும் சுஷ்மிதா தேவ், டிஎம்சி ஆகியோர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
2019 ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சர்ச்சைக்குரிய நபரை ராஜ்ய சபா உறுப்பினராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.