புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி.
அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவார் என்ற தகவல்கள் பரவியது. பாஜக, தனது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை அறிவிக்க மறுத்தது. இதனால், ரங்கசாமி முகாமில் அமைதியே நிலவியது.
இதனிடையே, ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க, திமுக தரப்பில் முயல்வதாக செய்திகள் கசிந்தன. புதுச்சேரியில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க, எந்தவித சமரசத்தையும் ஏற்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும் பேட்டியளித்தார்.
எனவே, என்.ஆர்.காங்கிரஸ், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைந்து, புதுச்சேரி தேர்தலை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுதான், ரங்கசாமியின் அரசியலுக்கும் நல்லது என்றும் கணிக்கப்பட்டது.
ஆனால், அதற்குள் ஆட்டம் பழையபடி மாறிவிட்டது. 16 தொகுதிகளை தன் கட்சிக்குப் பெற்றுக்கொண்டு, பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக இணைந்துவிட்டார் ரங்கசாமி. பாஜகவின் குணம் தெரிந்துதான் அவர் இப்படி செய்தாரா? என கேள்வியெழுப்புகின்றனர் பல அரசியல் பார்வையாளர்கள்.
தொடக்கத்திலேயே ரங்கசாமியின் கால்களை வார முயன்ற பாஜக, அவர் திமுக பக்கம் சென்றுவிடுவாரோ என்று பயந்தே, தற்போது அவருக்கு முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது. ஆனால், தேர்தலில் ஒருவேளை இந்தக் கூட்டணி வென்றாலோ அல்லது வெற்றிபெற வைக்கப்பட்டாலோ, பாஜகவின் திருவிளையாடல் வேறுமாதிரியும் இருக்கலாம். எப்படிப்பார்த்தாலும், நீண்டகால அரசியல் நோக்கில், ரங்கசாமியின் இந்த முடிவு, அவருக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தக்கூடியதே!
இதை அனுபவசாலியான அவர் எப்படி உணராமல் போனார்? அல்லது வேறுவகையில் மிரட்டிப் பணியவைக்கப்பட்டாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன. போகப் போகத்தான் அனைத்தும் புலப்படும்!