சென்னை: என்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்பு படிக்க விரும்புவர்களுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது. ஜூலை 15 முதல் தொடங்கிய விண்ணப்பப்பதிவு இம்மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது.

பொறியியல் படிப்புகளில் சேர 1, 60, 834 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 1 ,31, 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்கள்  அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற நேற்று முன்தினம் வரை அவகாசம் தரப்பட்டது.

இந் நிலையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வி அமைச்சர் கே. பி. அன்பழகன் இன்று  வெளியிட்டார். சென்னை தரமணியில்  மத்திய பாலிடெக்னிக் கல்லூரி ஒருங்கிணைந்த  வளாகத்தில் அவர் வெளியிட்டார்.

1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேருக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. பதிவு செய்த மாணவர்களுக்கு செல்போன், இ மெயில் மூலம் ரேண்டம் எண் அனுப்பப்பட்டுள்ளது.