400 ஆதிவாசி குடும்பங்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தேவையான மளிகைப்பொருகள் மற்றும் மருந்துப் பொருள்களை அளித்து உதவி செய்திருக்கிறார் நடிகர் ராணா.

கொரோனா பேரிடர் காலத்தில் பலவேறு உதவிகளை செய்து வருகிறார் ராணா.

குறிப்பாக தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை அளித்து உதவி செய்துள்ளார்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து தந்துள்ளார்.