துபாய்:

1,300 கி.மீ தொலைவுக்கு தாக்கக்கூடிய புதிய கப்பல் ஏவுகணையை  நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது ஈரான்.


1979-ம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியை நினைவுகூறும் வகையில், ஈரானில் கடந்த சனிக்கிழமையன்று கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிகழ்வையொட்டி புதிய கப்பல் ஏவுகணையை ஈரான் பார்வைக்கு வைத்தது. இந்த ஏவுகணை 1,300 கி.மீ தொலைவுக்குச் சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஏவுகணை திட்டங்களை ஈரான் விரிவாக்கம் செய்து கொண்டே போகிறது. அந்நாட்டின், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

எனினும், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணையை உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என ஈரான் கூறிவருகிறது.

இது குறித்து புரட்சி கமாண்டர் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கண்டம் விட்டு கண்டம் தாக்கும் எங்களது ஏவுகணைக்கு தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது, எங்களது ஏவுகணை திட்டத்தை விரிவாக்கம் செய்ய வழிவகுப்பதாகக் கூறியுள்ளார்.

I