நியூயார்க்:

அந்தஸ்தின் அடையாளமாக விளங்கிய ரோலக்ஸ் கடிகாரம், லூயிஸ் வூய்ட்டன் கைப்பை, பல லட்சம் மதிப்புள்ள புகாட்டி காரை எல்லாம் மறந்து விட்டு, கல்வியிலும் சுகாதாரத்திலும் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் அமெரிக்க கோடீஸ்வரர்கள்.


வெளி உலகுக்கு தங்களை பணக்காரர்களாக அடையாளம் காட்ட உதவும் இவை, அடுத்த தலைமுறைக்கு தொடரக் கூடாது என்பதில் அமெரிக்க வசதி படைத்தவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த ஆடம்பரப் பொருட்களில் செய்த முதலீட்டை கல்வி மற்றும் மருத்துவத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அதேசமயம் பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் ஆரம்பித்துள்ளார்கள்.

கூகுளில் அடுத்தவர்கள் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு மலைகளில் வீடு கட்டுவதையே பெருமளவு விரும்பத் தொடங்கியுள்ளனர் உயர் வருவாய் வகுப்பினர் மற்றும் நடுத்தரப் பிரிவினர்.

ஆனால், பெரும் செல்வந்தர்களோ, சமூக அந்தஸ்தை வெளிக்காட்டும் எதையும் செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.

எலிசபெத் கர்ரிட் தனது புத்தகத்தில், உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கும் அமெரிக்கர்கள், 2007-ம் ஆண்டுக்குப் பிறகு ஆடம்பரப் பொருட்களை வாங்க 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவழிக்கின்றனர்.

அமெரிக்க நுகர்வோர் செலவின ஆய்வு தரவுகளிலிருந்து இது தெளிவாகிறது. இத்தகைய போக்கு பெரும் செல்வந்தர்கள் மத்தியில் மட்டும் ஏற்படவில்லை, ஆதரவற்ற நிலையில் இருப்போரிடமும் பற்றிக் கொண்டுள்ளது.

வசதிபடைத்தவர் எல்லாம் கல்வி, ஓய்வுக்குப் பிந்தைய முதலீடு, சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.