சென்னை: தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஷவ்வால் பிறை தென்படாததால் நாளை ரம்ஜான் பெருநாள் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் மே 25ம் தேதி ரம்ஜான் கொண்டாடப்படும். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் கண்டிப்பாக நாளை நோன்பிருக்க வேண்டும் என்று அவர் அறிவித்துள்ளார்.
பொதுவாக ரம்ஜான் பிறை தெரிந்த மறுநாள் கொண்டாடப்படும். ஆனால் இன்று பிறை தெரியவில்லை. சில மத்திய கிழக்கு நாடுகளில் இன்று பிறை தெரிந்த காரணத்தால் நாளையே ரம்ஜான் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.