நடிகர் கமலஹாசன் கொரோனா காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி, சிம்பு ஆகிய இருவரின் பெயர் அடிபட்ட நிலையில், கமலஹாசனே காணொளி காட்சி மூலம் மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்குவார் என்று கூறப்பட்டது.

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் ஆகியோரின் ஒப்புதலுக்குப் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலே தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

சிகிச்சை முடிந்து கமலஹாசன் நலமுடன் வரும் வரை இரண்டு வாரங்களுக்கு மட்டும் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]