ராமண்ணா வியூவ்ஸ்:
ன்று மருத்துவர்கள் தினம்.  எனக்கு தஞ்சையில் இருந்த  (போலி) டாக்டர் ஒருவரின் நினைவு வந்தது. வெளிப்படையாக, “டாக்டர், கிளினிக்” என்று போர்டு வைத்து செயல்பட்டார். குறைந்த கட்டணம், கைராசியான டாக்டர் என்ற பெயர் எடுப்பார். திடீரென போர்டு காணாமல் போய்விடும். வீடு (கிளினிக்) பூட்டியிருக்கும்.
விசாரித்தால்,  “அவர் படிச்சதே எட்டவதுதான். ஒரு டாக்டர் கிட்ட எடுபிடியா இருந்தார். அப்படியே பிக்அப் (!) ஆகி, தனியா கிளினிக் வைக்க ஆரம்பிச்சுட்டார். அதான் போலி டாக்டர் என்று போலீஸ் பிடித்துப் போய்விட்டது” என்று தகவல் வரும்.
download (1)
கொஞ்ச நாள் கழித்து, தஞ்சையின் இன்னொரு பகுதியில் கிளினிக் திறப்பார். அடுத்த கொஞ்சநாளில் ஆள் காணமல் போய், வேறு பகுதியில் செயல்பட ஆரம்பிப்பார். மீண்டும்  “போலீஸ் அரெஸ்ட் “ என்று தகவல் வரும்.
பிறகு நான் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்துவிட்டேன்.  நீண்ட நாள் கழித்து ஊருக்குப் போகும்போது, நண்பர் ஒருவருக்கு சிறு விபத்து. பக்கதில் கிளினிக் இருப்பதாக சொன்னார்கள். ஆகவே அங்கே நண்பரை அழைத்துச் சென்றேன்.

ராமண்ணா
ராமண்ணா

இளவயது டாக்டர் ஒருவர் நண்பருக்கு சிறப்பாக சிகிச்சை அளித்தார். அப்போது அங்கு வந்தார் வயது முதிர்ந்த ஒருவர். இளம் மருத்துவர் சிகிச்சை அளிப்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
எங்கோயோ பார்த்த முகச்சாயலாக இருக்கிறதே என்று  கவனித்தேன்.
அட.. அந்த போலி டாக்டர்!
தான் ஆசைப்பட்டு படிக்கமுடியாத  எம்.பி.பி.எஸ். படிப்பை,  மகனை படிக்கவைத்து டாக்டர் ஆக்கிவிட்டாராம்!
சபதத்தை நிறைவேற்றிய அவரும்,  அதை நிறைவேற்றிக்காட்டிய மகனும் ஆச்சரியப்பட வைத்தார்கள்.
சினிமா கதை மாதிரியான விசயங்கள் சில நிஜத்திலும் நடக்கத்தான் செய்கிறது!