ராமேஸ்வரம்:
வரும் 31ந்தேதி முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரயற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளனர்.
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரியும் போராட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, வருகிற 31ந்தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழகம், புதுச்சேரி மீனவர்களின் 184 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அதை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குந்துகாலில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.