ராமேஸ்வரம்,

மிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை கொண்டுவந்துள்ள புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அளித்துள்ள உறுதிமொழியை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவித்து உள்ளனர்.

எல்லைதாண்டி கடலுக்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், பறிமுதல் செய்யப்படும் படகுகளுக்கு 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை வசமுள்ள 156 தமிழக படகுகளையும், சிறையில் உள்ள 69 மீனவர்களையும் விடுதலை செய்ய கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தனர்.

கடந்த 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அரசு அதிகாரிகளுடன்  நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இலங்கை யில்  புதிதாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவை ரத்து செய்ய இந்திய அர  வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்,  நாளை  முதல் கடலுக்கு செல்ல இருப்பதாக கூறி உள்ளனர்.