திருச்சூர்
காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பாத யாத்திரை மூலம் அமித் ஷாவின் எடைதான் குறையும் என கிண்டலாக சொல்லி உள்ளார்.
திருச்சூரில் கங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவை அள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மத்தியில் ஆளும் பா ஜ கவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்து காங்கிரஸ் தலைவர்களி ஒரு வரான ரமேஷ் சென்னிதாலா உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பா ஜ க மற்றும் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
ரமேஷ் சென்னிதால தனது உரையில், “அமித் ஷா இந்த நாட்டின் ஜனாதிபதியோ பிரதமரோ இல்லை. அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆனா அவரது வருகைக்காக இந்த பையனூர் பகுதியில் சாலைகள் நன்கு சீரமைக்கப்பட்டுள்ளன. அவர் எனது தொகுதியிலும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஆசைப் படுகிறேன் . அப்படியாவது அங்குள்ள சாலைகளும் இதே போல் சீரமைக்கப்படும் என்னும் காரணத்தினால் தான் நான் அதை விரும்புகிறேன்.
உள்ளூரி விடுமுறை அளிக்கப்பட்டு, அவர் பேசுவதற்காக பையனூர் பேருந்து நிலையம் காலி செய்து தரப்பட்டுள்ளது. அவருக்கு Z+ பாதுகாப்பு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருந்தாலும் உள்ளூர் போலீஸ் படையினரும் எக்கச்சக்கமாக குவிக்கப்பட்டுள்ள்னர். இப்படி இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பா ஜ க வை எப்படி எதிர்ப்பதாக சொல்லிக் கொள்கிறது?
அமித் ஷா பாதயாத்திரையால் அவருடைய எடைதான் குறையுமே தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. அமித்ஷா வன்முறையை தூண்ட இது குஜராத் இல்லை. இது கேரளா என்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். இங்குள்ள மக்கள் வன்முறையை தூண்டினால் பா ஜ க வுக்கு மட்டும் எதிராக அல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிராக செயல்பட தயங்க மாட்டார்கள். இரு கட்சிகளுமே தங்கள் ஆட்சி மூலம் மக்களை கொடுமைப்படுத்துவதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர்” என கூறினார்.
அமித் ஷா திடீரென தனது பயணத்தை முடித்துக் கொண்டு டில்லி திரும்பியது தெரிந்ததே.