Ramdev’s Patanjali enters restaurant business with Postik

 

யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தற்போது நவீன உணவகங்களை நடத்தும் புதிய சந்தையிலும் கால்பதித்துள்ளது..

 

யோகா பயிற்சிகளை பிரம்மாண்டமாக நடத்தி பணக்காரர்களிடம் இருந்து பல கோடிகளை திரட்டிய யோகாகுரு ராம்தேவ், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும், ஆயுர்வேத உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கினார். தற்போது, மிகப்பெரிய கார்பரேட் நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. இந்திய சில்லறை விற்பனைச் சந்தையில் பதஞ்சலி தயாரிப்புகள் சக்கை போடு போடுகின்றன.

 

இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் நவீன உணவகங்களை நடத்துவதிலும் களமிறங்கி உள்ளது.

 

சண்டிகரில் ஜிராக்பூர் என்ற இடததில் போஸ்டிக் ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் இயங்கி வரும் நவீன உணவகத்தின் பெயர்ப்பலகை, மெனு அட்டை என அனைத்திலும் பதஞ்சலி நிறுவனத்தின் லோகோ இடம்பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் முழுக்க சைவ உணவு மட்டுமே பரிமாறப்படுகிறது. உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியமான உணவு மட்டுமே இங்கு பரிமாறப்படுவதாக கூறுகின்றனர், போஸ்டிக் ரெஸ்டாரன்டில் பணிபுரியும் சிப்பந்திகள்.

 

ரெஸ்டாரன்டின் மெனு அட்டைகளிலும், சுவர்களிலும் ராம்தேவ் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, இனி ராம்தேவின் பதஞ்சலி ரெஸ்டாரன்ட்டுகளை நாட்டின் முக்கிய நகரங்களில் பார்க்கலாம். உலக அளவிலும் கூட அதனை எடுத்துச் செல்வது அவருக்கு ஒன்றும் பெரிய காரியமாக இருக்காது.

 

யோகா பயிற்சிகளைை நடத்தும் சாமியாராக வலம் வந்த ராம்தேவ் தற்போது, கார்பரேட் உலக கனவானாக உருவெடுத்துள்ளார். ஹரே ராமா…!