ராமலிங்கம் கொலை வழக்கில் 18பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! என்ஐஏ நடவடிக்கை

Must read

திரிபுவனம்

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகம்மை விசாரணை நடத்தி வந்த நிலையில், இது தொடர்பாக 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும், நேஷனல் ஃபிரன்ப் ஆப் இந்தியா, இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 5ந்தேதி கும்பகோணம் அருகில் உள்ள திரிபுவனத்தில் உள்ள தலித் காலனி மக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சித்த சம்பவம் குறித்து  கேள்விபட்ட பாமக பிரமுகர், அங்கு சென்று அவர்களிடம் வாக்குவாதம் நடத்தினர்.  இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து,  அங்கு வந்த சில இஸ்லாமிய அமைப்பினர் இரு தரப்புக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, அன்று இரவு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு கும்பல் ராம லிங்கத்தின் கைகளை வெட்டி வீசி கொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்  சம்பந்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானதை தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், முக்கிய குற்றவாளியான நஜீம் என்பவன்  கைது செய்யப்பட்டான். இவன் அந்த பகுதியில் உள்ள பாப்புலர் ஃபிரெண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த6வர்ன.  அதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர். இந்த சோதனையின்போது, ஐஎஸ் இயக்க விளம்பர நோட்டீஸ் உள்பட ஏராளமான மொபைன்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், லேப்டாப், டெஸ்க்டாப் ஹார்டு டிஸ்க், டைரிகள், ஆயுதங்கள்  என ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 18 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமலிங்கம் கொலை: குற்றப்பத்திரிகையில் உள்ள 18 பெயர்கள்

முகமது அசாருதீன், முகமது ரியாஸ் நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், முகமது தவு பிக், முகமது ஃபர்வீஸ், தோஹீத் பட்சா, முகமது இப்ராஹிம், முகமது ஹசன் குத்தஸ்; ரஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானுதீன், ஷாஹுல் ஹமீத், நபீல் ஹசன், முகமது ஃபாரூக், மைடன் அகமது ஷாலி.

அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்ள  தொடர்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது என என்ஐஏ அதிகாரிகள்  தெரிவித்துள்ளார்.

More articles

Latest article