சென்னை:
“வானில் பிறை தென்படவில்லை என்பதால், நாளை (ஜூன் 7 வியாழன்) ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளதாக தமிழ்நாடு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும், ஆகவே இன்று (ஜூன் 6) ரம்ஜான் என்று சிலர் கூறுகிறார்கள்.

இஸ்லாமியர்களின் முக்கியமான திருவிழாவான ரமலான், பிறை பார்த்து தீர்மானிக்கப்படும். இந்த நாளை, தலைமை ஹாஜி அறிவிப்பார். அதன்படி, தமிழக தலமை ஹாஜி, “பிறை தென்படவில்லை, ஆகவே புதன் கிழமையும் நோன்பு இருக்க வேண்டும். வியாழன் அன்று ரமலான் கொண்டாட வேண்டும்” என்று அறிவித்தார்.
ஆனால், கன்னியாகுமரியில் பிறை தென்பட்டதாகவும் அதனால் இன்று (புதன் கிழமை) ரமலான் கொண்டாட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.
இவர்கள் தெரிவிப்பதாவது:
“தமிழகத்தில் கன்னியாகுமரியில் பிறை தென்பட்டுவிட்டதால் புதன் கிழமையான இன்று ரமலான் கொண்டாட வேண்டும். மேலும் நேற்றோடு ரமலான் மாதம் நிறைவடைந்து ஷவ்வால் மாதம் துவங்கிவிட்டது. ஆகவே இன்றுதான் ரமலான். அரபு நாடுகளிலும் இன்றுதான் கொண்டாடப்படுகிறது. ரமலான் அன்று நோன்பு நோற்பது ஹராம் (குற்றம்) ஆகும்” என்று தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, நாளை (ஜூன் 7) அன்றுதான் ரமலான பண்டிகை என்று கடந்த திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதற்கு இஸ்லாமியர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பிறை பார்த்து தீர்மானிக்கும் பண்டிகை ரமலான். அதை மிக முன்னதாக எப்படி தீர்மானிக் முடியும். இது தவறு” என்று கூறுகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel