சென்னை:  டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமகவில் வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்,  மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது,  அரசியலில் எதுவும் நடக்கலாம் என கூறினார். இதன் மூலம்   பாமக நிறுவனர் ராமதாஸ்  திமுக கூட்டணியில் சேருவது உறுதியாகி உள்ளது.

பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக பாமக இரு பிரிவு பிரிந்து கிடக்கிறது. பாமக தலைவர் அன்புமணி தலைமையிலான பாமகவே அதிகாரப்பூர்வமானது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால், அன்புமணி, அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று விருப்ப வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார்.  இந்த  நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளனர். அதே போல் டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

பின்னர் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்கு கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாக கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.

நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன். பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான் என்றார். கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். வெற்றியும் பெறுவோம் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்   நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள். ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு ஆதரவளித்தது ஏன் ?  என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய ராமதாஸ்,  எனக்குத் தெரியவில்லை.  உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இரண்டில் ஒன்றை தொடுங்கள். நான் சொல்கிறேன் என்றார்.

திமுக ஆட்சியை புகழ்கிறீர்கள், ஆனால், திமுகவில் ஏற்கனவே விசகி இருக்கும் நிலையில், அந்த கூட்டணியில் நீங்கள் சேர முடியுமா என கேள்வி எழுப்பினார், அதாவது,  திருமாவளவன் இருக்கக்கூடிய கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா? என்றார்.

இதற்கு பதில் அளித்த ராமதாஸ்,  அரசியலில் எதுவும், எப்போதும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் எப்போதும் நடக்காது என கூற முடியாது என்று கூட்டணி திமுகவுடன்தான் என்பதை சூசகமாகதெரிவித்தார்.

[youtube-feed feed=1]