இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் மார்ச் 2 முதல் துவங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் இன்று பிறை தெரியாததை அடுத்து மார்ச் 2 முதல் நோன்பு மேற்கொள்ளப்படும்.
ரமலான் மாதம் என்பது இஸ்லாமிய காலண்டரில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் ஒன்பதாவது மாதமாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமாக கருதும் மாதமாகும்.
இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் மிக கடுமையான நோன்பு கடைபபிடிப்பது வழக்கம். புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது என்பது இஸ்லாமின் ஐந்து முக்கியமான கொள்கைகளில் ஒன்றாகும்.