சென்னை: புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த நோன்பின் முடிவில், ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

புனித ரமலான் பிறை பார்க்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

இன்று வெள்ளிக்கிழமை புனிதமிகு ரமலான்பிறை பார்க்கப்பட்டது. ஆதலால், ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. முபின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் தங்கள் இல்லங்களிலேயே சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.