சென்னை

குன்னூர் திமுக சட்டசபை உறுப்பினர் ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ். எம்.நாசர் ஆகியோரை புதிதாக அமைச்சர்களாக நியமிக்க பரிந்துரைத்ததர்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளித்த் நேற்று  மதியம் 3.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஆளுநர் ஆர் என் ரவி பதவியேற்பு உறுதிமொழியும், ரகசிய காப்பு உறுதிமொழியும் புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி செய்துவைர்த்தார். ஆர்.ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, கோவி செழியன், எஸ்.எம்.நாசர் வரிசையாக அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டு கோவி.செழியனுக்கு உயா்கல்வித்துறையும், வி.செந்தில்பாலாஜிக்கு மின்சாரத்துறையும், ஆ.ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், சா.மு.நாசருக்கு சிறுபான்மையினா் நலன்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சாா்பில் அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் புதிதாக அமைச்சராகியுள்ளதால் தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக திமுகவின் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைச் செயலா் செயலா் கி.சீனிவாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.