ஞ்சகுலா

லாத்கார சாமியார் ராம் ரஹிம் ஆசிரமத்தில் பணியாற்றும் சட்ட ஆலோசகர் மற்றும் சாமியாரின் அந்தரங்க செயலருக்கும் விரைகள் நீக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

தேரா தத்தா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹிம் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.  அதை தொடர்ந்து வன்முறை வெடித்து 32 பேர் பலியானார்கள்.  கோடிக்கணக்கில் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.   இது தொடர்பாக சாமியாரின் வளர்ப்பு மகள் என சொல்லப்படும் ஹனி பிரித்,  மற்றும் ஆசிரமத்தின் சட்ட ஆலோசகர் டான் சிங்,  சாமியாரின் அந்தரங்க செயலர் ராகேஷ் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சகுலாவின் போலீஸ் அதிகாரி ஒருவர், “டான் சிங் மற்றும் ராகேஷ் குமாருடன் விசாரணை மேற்கொள்வதற்காக இருவரும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அங்கு அவர்கள் இருவருக்கு, விதைகளும் இல்லை என்பது கண்டுபிடிக்கப் பட்டது.   அவர்களை தற்போது இங்குள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையில் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.   சோதனையின் முடிவில் அவர்களுக்கு விரைகள் நீக்கப்பட்டதா என்பதை உறுதி செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

ஏற்கனவே ஒரு முன்னாள் தேரா தத்தா சவுதா ஆசிரம வாசி சுமார் 400 பேருக்கு மேல் கட்டாய ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.