ஞ்ச்குலா

லாத்கார வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரகீமுக்கு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தில் சாமியார் குர்மீத் ராம் ரகிம் சிங் ஒரு பெரிய ஆன்மிக அமைப்பான தேரா சச்சா சௌதாவின் தலைவராக உல்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த பெண்களில் இருவரை இவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் வருடம் தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரகிம் குறித்த உண்மைகளை வெளியிட்ட பூரா சச் என்னும் பத்திரிகை உர்மையாளர் ராம் சந்தர் சத்ரபதியை ராம் ரகிம் ஆள் வைத்து கொன்றுள்ளதாக ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. அத்துடன் அவருக்கு உதவி செய்த தேரா சச்சா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கும் ந்லுவையில் உள்ளது.

சாமியார் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் ராம்சந்தர் சத்ரபதியின் கொலை வழக்கு விசாரணை விடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது. அதன் பிறகு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராம் ரகிம் உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 50000 அபராதமும் வித்து தீர்ப்பு அளித்துள்ளது.