லக்னோ: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர்  ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று பாராட்டிய நிலையில், இன்று அயோத்தி ராம் மந்திர்  அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் மற்றும் சுவாமி கோவிந்த் தேவ் கிரி ஆகியோர் பாராட்டியுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குமரி முதல் காஷ்மீர் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தியின்  யாத்திரை தற்போது உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று பிற்பகல்  உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் வழியாக நுழைந்தது. உ.பி. எல்லையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது.  நேற்று இரவு  பாக்பத்தில் உள்ள மாவிகலா கிராமத்தில் இரவு தங்கி, மீண்டும் இன்று ( ஜனவரி 4 ஆம் தேதி)  ஷாம்லி வழியாக செல்கிறது.

உ.பி.யில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவும், வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளன. மேலும்,   க, அயோத்தி  ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர்  ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் , ராகுல்காந்தியின் யாத்திரை வெற்றிபெற கடிதம் எழுதி வாழ்த்தினார்.

இந்த நிலையில்,  ராம் மந்திர் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், 

 “நாடு முழுவதும் நடந்து வரும் இளைஞருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.  அதில் எந்த தவறும் இல்லை என்பதால் அவரது நடவடிக்கையை பாராட்டுகிறேன். நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன். ஆர்எஸ்எஸ் ஒருபோதும் பாரத் ஜோடோ யாத்திரையை கண்டிப்பதில்லை. உண்மையில் அனைவரும் நாட்டின் யாத்திரையை செய்ய வேண்டும் என பாராட்டினார்.

ராம்மந்திர் அறக்கட்டளையின் மற்றொரு மூத்த உறுப்பினரான சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகாராஜ், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையைப் பாராட்டினார்.  “அவரை ஆசீர்வதிக்க ராமரைப் பிரார்த்திக்கிறேன். தேசம் ஒற்றுமையாகவும், வலிமையாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும். பாரத் ஜோடோ ஒரு நல்ல முழக்கம், இந்தியா ஒன்றுபட வேண்டும்” என்றார்.

ராகுலின் பாதயாத்திரை, நாளை (ஜனவரி 5 ஆம் தேதி)  மாலை பானிபட்டில் உள்ள சனௌலி வழியாக ஹரியானாவிற்குள் நுழைவதற்கு முன், மூன்று மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளது.

ராமர் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு: உ.பி.யில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் வாழ்த்து…