கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..
இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் 200 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் ஏழைகளுக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்கின்றனர். ஊரடங்கு முடியும் வரை இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் முடிவெடுத்துள்ளார்.
என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்த ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.