சென்னை

திமுக பொது செயலாளர் வைகோ வின் மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளபப்ட்டது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வரும் 18 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திமுக அணியில் இரு திமுக உறுப்பினர்களும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வேட்பு மனு அளித்தனர். வைகோ மீது நடந்துக் கொண்டிருந்த தேச துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதை ஒட்டி வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்படுமா என சந்தேகம் எழுந்தது. வைகோ மதிமுக வை சேர்ந்த வேறு யாரும் போட்டியிட மாட்டார் என அறிவித்தார். அதனால் நேற்று மாற்று திமுக வேட்பாளர் அறிவிக்கபட்டார். இன்று தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

அதில் வைகோ வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போதுள்ள நிலையில் திமுக மூவரையும் அதிமுக மூவரையும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய முடியும். அதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவது உறுதி ஆகி உள்ளது.