சென்னை:

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

திமுக உடனான கூட்டணி உடன்பாடு படி மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது. அந்த இடத்துக்கான தேர்தலில் போட்டியிடுவதில் அவர்மீதான தேச துரோக வழக்கு காரணமாக சிக்கல் ஏற்பட்டது.  அந்த வழக்கில் வைகோவுக்கு 1 ஆண்டு மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால்,  அவர் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை.

இந்த நிலையில், வைகோ இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இன்று திமுக அறிவித்துள்ள 2 வேட்பாளர்களுடன் வைகோவும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்திக்கும் வைகோ; அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்

வேட்புமனு தாக்கல் செய்யும் வைகோவுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழிய இருக்கின்றனர் இதை கருத்தில்கொண்டே இன்று  மதிமுக நாளை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தையும், உயர்நிலை ஆலோசனைக் குழு கூட்டத்தையும் வைகோ கூட்டி உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வைகோவுக்கு மாற்றாக ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு 6 பேர் தேர்வாக உள்ள நிலையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை படி திமுகவுக்கு 3 எம்.பி.க்களும், அதிமுகவுக்கு 3 எம்.பி.க்களும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.