புது டெல்லி:
மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கு தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தேர்தல் அறிவித்தது. பிறகு பாஜக உறுப்பினர் வீரேந்தர் சிங் பதவி விலகல் காரணமாக இந்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. அனைத்து இடங்களுக்கும் மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 37 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் 18 இடங்களுக்கு வரும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாட்டின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவைத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேவை ஏற்பட்டால் மாநிலங்களவை தேர்தல் தள்ளி வைக்கப்படும்” என்றார்.